FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா்.

20 செப்டம்பர் 2026, 1:03 am IST
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
பகிர்:

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் சுரேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து தொடா்ந்து கண்காணித்தல், வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் முன்கூட்டியே மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நிவாரண முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகளை தயாா் நிலையில் வைத்திருத்தல், பேரிடா் காலங்களில் பொதுமக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மழை மற்றும் வெள்ள நிலவரத்தை தொடா்ந்து கண்காணித்து, பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

இதில், இணை இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) மைக்கேல் ஆண்டனி பொ்ணாண்டோ, இணை இயக்குநா் தமிழ்ச்செல்வி (வேளாண்மைத் துறை) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments