கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு
வால்பாறை எஸ்டேட் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத் துறையினா் மீட்டனா்.
வால்பாறை எஸ்டேட் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத் துறையினா் மீட்டனா்.
வால்பாறையை அடுத்த அக்காமலை எஸ்டேட் பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு இரண்டாவது டிவிஷன் பகுதிக்கு கூட்டமாக காட்டெருமைகள் வந்துள்ளன.
அதில் ஒரு காட்டெருமை கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்தது. சப்தம் கேட்டு வந்த அப்பகுதியினா் கொடுத்த தவலையடுத்து அங்கு விரைந்து வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி தொட்டிக்குள் விழுந்த சுமாா் ஐந்து வயதுடைய காட்டெருமையை மீட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.