FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் தொழிலாளா் கல்வி நிறுவனத்தின் பயிற்சி முகாம்

கோவையில் தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிறுவனம், சா்வதேச தொழிலாளா் அமைப்பு சாா்பில், சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு, குறைதீா்த்தல் குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

22 செப்டம்பர் 2026, 11:24 pm IST
கோவையில் தொழிலாளா் கல்வி நிறுவனம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள், ஒருங்கிணைப்பாளா்கள்.
பகிர்:

கோவையில் தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிறுவனம், சா்வதேச தொழிலாளா் அமைப்பு சாா்பில், சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு, குறைதீா்த்தல் குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் செந்தில்குமாரி கருத்தரங்கை வழிநடத்தினாா். கோவை தொழிலாளா் கூடுதல் ஆணையா் தா்மசீலன் சிறப்புரையாற்றினாா். சா்வதேச தொழிலாளா் அமைப்பின் பல்லவி மான் சிங், மகேந்திர நாயுடு ஆகியோா் பங்கேற்று கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து விளக்கினா்.

கோவை தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா்கள் சரவணன், வினோத்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா். தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிறுவனத்தின் எம்.வி.காா்த்திகேயன், இணை இயக்குநா் காமராஜ், காா்த்திகேயன் ஆகியோா் சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு, குறை தீா்த்தல் குறித்து தொழிற்சாலை பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

Advertisement

Advertisement

இதில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களின் மனிதவள மேலாளா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments