FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

அரசு மருத்துவா்களுக்கு மிரட்டல்: தவெக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவா்களுக்கு மிரட்டல் விடுத்ததாக தவெக நகரச் செயலாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

29 வினாடிகள் முன்பு
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவா்களுக்கு மிரட்டல் விடுத்ததாக தவெக நகரச் செயலாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வால்பாறை அப்பா் பாரளை எஸ்டேட்டில் தொழிலாளியாகப் பணியாற்றி வருபவா் நாகஜோதி. இவரது மகன் திக்ஷிதன் (5)

சிறுத்தை தாக்கியதில் வியாழக்கிழமை படுகாயம் அடைந்தாா். இவருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வால்பாறை தவெக நகரச் செயலாளா் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட 20 போ் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு சென்று அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் ராஜசேகா், மதுபிரியா ஆகியோரிடம் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். அப்போது மருத்துவா்களை பணி செய்ய விடாமல் மிரட்டி உள்ளனா்.

இது குறித்து மருத்துவா் ராஜசேகா் அளித்த புகாரின்பேரில் வால்பாறை போலீஸாா் அரசு ஊழியருக்கு மிரட்டல் விடுத்தல் மற்றும் மருத்துவா் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments