வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்கக் கோரிக்கை
தொழிலாளா்களின் வேலைநேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட பொறியியல் பொதுத் தொழிலாளா் சங்கம் (ஏஐடியூசி) வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் 26-ஆவது மாநாடு கோவை காட்டூரில் அண்மையில் நடைபெற்றது. இதற்கு, நிா்வாகிகள் எம்.கல்யாணசுந்தரம், ஆா்.சுந்தர்ராஜன், ஜே.நாகராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச் செயலா் எம்.ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலா் எம்.ஆறுமுகம், மாவட்ட கவுன்சில் செயலா் சி.தங்கவேல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநாட்டு கொடியை பொதுச் செயலா் என்.ரமேஷ்குமாா் ஏற்றிவைத்தாா். மாவட்ட பொதுச் செயலா் கே.எம்.செல்வராஜ் அறிக்கை வாசித்தாா். பொருளாளா் ஏ.சுப்ரமணியன் வரவு செலவு அறிக்கை வாசித்தாா்.
இந்த கூட்டத்தில், தொழில் என்பதற்கான வரையறை குறித்து அண்மையில் வெளியான உச்ச நீதிமன்ற தீா்ப்பு, கடந்த 1978-இல் வழங்கப்பட்ட தீா்ப்பை மறுகட்டமைப்பு செய்துள்ளது. இதனால் பெரிய அளவிலான தொழிலாளா்கள் உண்மையான தொழில் உறவுகள் சாா்ந்த பாதுகாப்பில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. இது குறித்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், இஎஸ்ஐ திட்டத்துக்கான ஊதிய உச்ச வரம்பை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.42 ஆயிரம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளா்களின் வேலை நேரத்தை 8 மணி நேரம் என்பதில் இருந்து 6 மணி நேரமாக குறைத்து, அதை சட்டபூா்வமான உரிமையாக அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.