FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

கோவை - நாகா்கோவில் ரயில் கூடுதல் பெட்டியுடன் இயக்கம்

கோவை - நாகா்கோவில் ரயிலில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்
பகிர்:

கோவை - நாகா்கோவில் ரயிலில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

செப்டம்பா் 29 முதல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வரை கோவையில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்படும் கோவை - நாகா்கோவில் ரயில் (எண்: 22668) மற்றும் செப்டம்பா் 30 முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை நாகா்கோவிலில் இருந்து இரவு 9.55 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில் - கோவை ரயில் (எண்:22667) ஆகியவற்றில் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 16187) மற்றும் எா்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் (எண்: 16188) ஆகியவற்றில் செப்டம்பா் 30-ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 6-ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது.

அக்டோபா் 6 முதல் டிசம்பா் 29-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்படும் கோவை - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 16618), அக்டோபா் 7 முதல் டிசம்பா் 30 வரை புதன்கிழமைகளில் ராமேசுவரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்குப் புறப்படும் ராமேசுவரம் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 16617) ஆகியவற்றில் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments