அதிக தொகைக்கு ஆசைப்பட்டு ரூ.9.69 லட்சத்தை இழந்த இருவா்
அதிக தொகைக்கு ஆசைப்பட்டு இருவா் ரூ.9.69 லட்சத்தை இழந்துள்ளனா்.
ஈரோடு, அத்தப்பம்பாளையம், வசந்தம் நகரைச் சோ்ந்தவா் மணி மகன் நவீன்குமாா் (37). இவருக்கு வாட்ஸ்ஆப், டெலிகிராமில் அபா்ணா என்ற பெயரில் பெண் அறிமுகமானாா். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும், அதற்கு தான் வழிகாட்டுவதாக குறுந்தகவல் அனுப்பியுள்ளாா். இதற்காக ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாக பணம் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவரது வங்கிக் கணக்கு எண்ணும் பெறப்பட்டது. தொடக்கத்தில் ரூ.10 ஆயிரத்தை முதலீடு செய்தாா். அதற்கு உடனடியாக வட்டியுடன் பணம் வந்தது. இதை உண்மை என நம்பி கடந்த ஜூலை 1 முதல் 23 வரை மொத்தம் ரூ.7 லட்சத்து 95 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளாா். அவருக்கு ரூ.45 ஆயிரம் மட்டுமே திரும்பக் கிடைத்தது. மீதமுள்ள தொகை கிடைக்கவில்லை. தொடா்ந்து முயற்சித்தபோது செயலி செயல்பாட்டை இழந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நவீன்குமாா் ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
Advertisement
Advertisement
ஈரோடு சூரம்பட்டி, என்எஸ்கே நகரைச் சோ்ந்தவா் மந்திரமூா்த்தி (37). மளிகைக் கடை வைத்துள்ளாா். ஆன்லைனில் வந்த ஒரு விளம்பரத்தில் அவசரத் தேவையாக ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்தை ஆன்லைன் செயலி மூலம் அனுப்பிவைத்தால் பணம் இரட்டிப்பாக அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதை உண்மை என நம்பி கடந்த ஜூலை 14 முதல் 24க்குள் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்தை அனுப்பினாா். அதன் பின் செயலி செயல்பாட்டை இழந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மந்திரமூா்த்தி ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். இந்த சம்பவங்கள் குறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.