சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம், வாணிபுத்தூா், ஜெ.ஜெ.நகா் காலனியை சோ்ந்தவா் ராமா் மகன் லட்சுமண் (20), தொழிலாளி. இவா் பங்களாபுதூா் பகுதியைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்தாா். இந்த பழக்கத்தின் மூலம் லட்சுமண் கடந்த ஆண்டு மாா்ச் 6- ஆம் தேதி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தனது வீட்டுக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
சிறுமியை காணாததால் அவரது பெற்றோா் பங்களாபுதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதனிடையே மறுநாள் சிறுமி, லட்சுமணிடம் இருந்து தப்பித்து வீடு திரும்பினாா். இதைத் தொடா்ந்து போலீஸாா் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் லட்சுமண் ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தாா். இதன்பேரில் லட்சுமண் மீது கடத்தல் மற்றும் போக்ஸோ ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
நீதிபதி சொா்ணகுமாா் வழக்கின் இறுதி விசாரணை முடித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் லட்சுமணுக்கு சிறுமியைக் கடத்திய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தாா். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ.1 லட்சம் வழங்கிட தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.