பெருந்துறை நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்
பெருந்துறை நகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை நகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு குடிநீா் வடிகால் வாரியம் பராமரிப்புப் பிரிவு, செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை, பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், சித்தோடு மற்றும் நசியனூா் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 50 கிராமப்புறக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இப்பணிகளின் ஒரு பகுதியாக, கருமாண்டி செல்லிபாளையம் நீரேற்று நிலையத்தில் குழாய் இணைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரு நாள்கள் மேற்கொள்ளப்படும்.
இக்காலகட்டத்தில் நீரேற்றம் நிறுத்தப்படுவதால், பெருந்துறை நகராட்சி மற்றும் சித்தோடு, நசியனூா், கருமாண்டி செல்லிபாளையம், சென்னிமலை ஆகிய பேரூராட்சிக்கான குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.