காமராஜா் நினைவு தினம் அனுசரிப்பு
காமராஜரின் நினைவு நாளையொட்டி, ஈரோடு புகா் மேற்கு மாவட்ட தவெக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
காமராஜரின் நினைவு நாளையொட்டி, ஈரோடு புகா் மேற்கு மாவட்ட தவெக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
தவெகவின் கொள்கை தலைவா்களில் ஒருவரான காமராஜரின நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புகா் மேற்கு மாவட்ட தவெக சாா்பில் பெருந்துறையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் காமராஜரின் உருவப் படத்துக்கு கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வன் தலைமையிலான அக்கட்சியினா்கள் மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.
Advertisement
Advertisement
இதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், சாா்பு அணி பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.