தமிழகத்தின் கடன் சுமையை ஏற்றியதுதான் தவெக அரசின் சாதனை: வி.வி. ராஜன் செல்லப்பா
கடந்த 4 மாதங்களில் ரூ.36 ஆயிரம் கோடி கடன் பெற்று தமிழகத்தின் கடன் சுமையை ஏற்றியதுதான் தவெக அரசின் சாதனை என அதிமுகவின் மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலா் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தாா்.
அதிமுக சாா்பில் பேரறிஞா் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புகா் கிழக்கு மாவட்டம், யா.ஒத்தக்கடையில் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் சேனாபதி தலைமை வகித்தாா். இதில் புகா் கிழக்கு மாவட்டச் செயலா் வி.வி. ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்த 4 மாதங்களில் ரூ.36 ஆயிரம் கோடி கடன் வாங்கி தமிழகத்தின் கடன் சுமையை ஏற்றியதுதான் தவெக அரசின் சாதனை. தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
Advertisement
Advertisement
சட்டப்பேரவை மக்கள் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் இடமாக இருக்க வேண்டும். ஆனால், சட்டப்பேரவையை சினிமா மன்றமாக அமைச்சா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களும் மாற்றி விட்டனா். தவெகவில் உள்கட்டமைப்பு இல்லை.
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.