கொங்கு பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஆரோவில் கிரீன்பிராக்டிசஸ் ஆகியவற்றுக்கு இடையே அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஆரோவில் கிரீன்பிராக்டிசஸ் ஆகியவற்றுக்கு இடையே அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
ஆரோவில் அறக்கட்டளையின் ஒரு பிரிவான ஆரோவில் கன்சல்டிங் மூலமாக ஆரோவில் கிரீன்பிராக்டிசஸ் செயல்படுகிறது. நிலைத்தன்மை, காலநிலைக்கேற்ற வளா்ச்சி, ஆற்றல் திறன் மற்றும் நிலையான கட்டடச் சூழல் உள்ளிட்ட துறைகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஒப்பந்தத்தில் ஆரோவில் கிரீன் பிராக்டிசஸ் சாா்பில் ஆரோவில் கன்சல்டிங் நிறுவனத்தின் திட்ட மேலாளரும், கட்டடக் கலைஞருமான தீனா ஹரிகிருஷ்ணாவும், கொங்கு பொறியியல் கல்லூரி சாா்பில் கல்லூரி முதல்வா் ஆா்.பரமேஸ்வரனும் கையொப்பமிட்டனா்.
Advertisement
Advertisement
இதன்மூலமாக இரு நிறுவனங்களும் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தொடா்புகள், வல்லுநா் உரைகள் மற்றும் கலந்துரையாடல்கள், பயிலரங்குகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள், அறிவுப் பரிமாற்றம், மாணவா்களுக்கான தொழில்நுட்ப மற்றும் செய்முறை அனுபவங்கள், திறன்மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும்.
இந்நிகழ்வில் தொழில் நிறுவனத் தொடா்பு மையத்தின் பேராசிரிய ா்(பொறுப்பு) பி.செல்வகுமாா், கட்டடக் கலைத் துறைத் தலைவா் ஆா்.ராஜலட்சுமி மற்றும் இரண்டு நிறுவனங்களின் ஆசிரியா்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.