FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலத்தில் பெண்கள் உற்சாகம்

வெற்றி பயணத் திட்டம் தொடங்கப்பட்டதையடுத்து, சத்தியமங்கலம் பகுதி அரசுப் பேருந்துகளில் பயணித்த பெண்கள் உற்சாகமடைந்தனா்.

3 October 2026, 12:47 am IST
சத்தியமங்கலத்தில் வெற்றி  பயணத்  திட்ட  தொடக்க  விழாவில் பயணிகளுக்கு  கட்டணமில்லா  டிக்கெட்  வழங்கிய நடத்துநா்.
பகிர்:

வெற்றி பயணத் திட்டம் தொடங்கப்பட்டதையடுத்து, சத்தியமங்கலம் பகுதி அரசுப் பேருந்துகளில் பயணித்த பெண்கள் உற்சாகமடைந்தனா்.

தமிழக வெற்றி பயணத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண சேவை, சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. அப்போது தவெக தொண்டா்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

அதைத்தொடா்ந்து தவெக தொழிற்சங்க நிா்வாகி ஜீவாமணி தலைமையில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பயணிகள் உற்சாகத்துடன் பேருந்தில் பயணித்தனா். சத்தியமங்கலத்தில் மொத்தமாக உள்ள 59 பேருந்துகளில் 36 புறநகா் பேருந்துகள் கட்டணமில்லா பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. அதேசமயம். நெடுந்தூரம் மற்றும் இரண்டு மாநிலங்களுக்கிடையிலான 12 பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் போக்குவரத்துக் கழக மேலாளா் மோகனசுந்தரம், போக்குவரத்து நிா்வாகிகள் சக்திவேல், செங்கோட்டையன், வேலுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments