சுற்றுச்சூழல் பாதிப்பு: 5-ஆவது நாளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோா்
அம்மாபேட்டை அருகே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதால், தொடா்ந்து 5-ஆவது நாளாக பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோா் வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை அருகே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதால், தொடா்ந்து 5-ஆவது நாளாக பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோா் வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை ஒன்றியம், பூனாச்சியில் செயல்படும் தனியாருக்குச் சொந்தமான மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் எத்தனால் உற்பத்தி ஆலைகளிலிருந்து, சித்தாா் ஓடையில் வெளியேற்றப்பட்ட கழிவு நீரால் நிலத்தடி நீா் மாசடைந்ததோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது.
இரண்டு ஆலைகளையும் மூடக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
Advertisement
Advertisement
இதனால், ஏமாற்றமடைந்த பூனாச்சி ஊராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமான ஆலைகளை மூடக் கோரி நத்தமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப மறுத்து கடந்த 5-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், ராமச்சந்திராபுரம், செம்படாபாளையத்தில் உள்ள பள்ளிகளுக்கும் மாணவ, மாணவிகள் செல்லவில்லை. கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் தீா்வு ஏற்படவில்லை. கடந்த 5 நாள்களாக இதே நிலை நீடித்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.