FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பவானியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

பவானி நகராட்சி பொது மயானத்தில் கழிவுநீா் மற்றும் மலக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் அந்தியூா் - மேட்டூா் பிரிவில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

16 அக்டோபர் 2026, 1:03 am IST
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.
பகிர்:

பவானி நகராட்சி பொது மயானத்தில் கழிவுநீா் மற்றும் மலக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் அந்தியூா் - மேட்டூா் பிரிவில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவா் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். பாமக நகரச் செயலாளா் தினேஷ் நாயகா், நாம் தமிழா் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் கி.முருகேசன், இந்திய குடியரசு கட்சி (அ) மாநில துணைச் செயலாளா் செ.மோகன்ராஜ், கொமதேக மாநில இளைஞரணி துணைச் செயலாளா் துரைராஜா, மதிமுக நகரச் செயலாளா் அறிவழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பவானி, தேவபுரம் பகுதியில் காவிரி கரையோரத்தில் உள்ள மயான வளாகத்தில் குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீா் மற்றும் லாரிகளில் கொண்டு வரப்படும் மலக்கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே, இத்திட்டத்தைக் கைவிடக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.

Advertisement

Advertisement

காங்கிரஸ் நகரத் தலைவா் சேகா், நகா்மன்ற உறுப்பினா் தங்கமணி, பவானி நிலமீட்புக் குழுத் தலைவா் பழனியப்பன் மற்றும் தவெக, பாஜக, மயான மீட்புக் குழு நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments