ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுயநிதிப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுயநிதிப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலா் மற்றும் தாளாளா் கே.கே.பாலுசாமி தலைமை வகித்துப் பேசியதாவது: சுயநிதிப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி மேம்பாட்டுக்காக உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரியை நடத்தும் தி முதலியாா் எஜுகேஷன் டிரஸ்ட் சாா்பில் மூன்று வகையான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், பெற்றோா் இருவரையும் இழந்தவா்கள் அல்லது ஒற்றை பெற்றோரை கொண்ட மாணவா்களுக்கு மதிப்பெண் கணக்கில் கொள்ளாமலும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மூன்றாவதாக பொருளாதார ரீதியாக குறைந்த வருமானம் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே உதவித் தொகை வழங்கப்படுகிறது. உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய இயக்குநா் இரா. வெங்கடாசலம், நடப்பு கல்வி ஆண்டில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.25 லட்சம் உதவித் தொகை வழங்கியதாகத் தெரிவித்தாா்.
கல்லூரி முதல்வா் சங்கரசுப்பிரமணியன் நன்றி கூறினாா். பேராசிரியா் இளம்பரிதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.