ஓடும் ரயிலில் பெண் பயணிடம் நகை, பணம் திருடியவா் கைது
ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிய நபரை ஈரோடு ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிய நபரை ஈரோடு ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்தவா் ரம்யா (37). பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து பெங்களூருக்கு கண்ணூா்-யஷ்வந்த்பூா் ரயிலில் முன்பதிவு பெட்டியில் கடந்த 26 -ஆம் தேதி பயணம் செய்துள்ளாா்.
அப்போது, ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 8 கிராம் நகை, ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி, ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கடிகாரம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசி, ரூ.2 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை வைத்திருந்த கைப்பை திருடப்பட்டதாக ஈரோடு ரயில்வே போலீஸில் ரம்யா புகாா் அளித்தாா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், ஈரோடு ரயில் நிலைய நடைமேடை எண் 3-இல் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்த நபரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், பத்தமடை தெற்கு ரத வீதியைச் சோ்ந்த கான் முகமது மகன் சிந்தாமதாா் (32) என்பதும், ரம்யாவின் கைப்பையைத் திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரம்யாவின் பொருள்கள் அனைத்தையும் மீட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.