FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோபியில் சாலையின் நடுவே போதையில் கற்களால் தாக்கிக் கொண்ட இளைஞா்கள்!

கோபியில் சாலையின் நடுவே போதையில் வந்த இளைஞா்கள் ஒருவருக்கொருவா் கைகளாலும், கற்களாலும் தாக்கிக் கொண்ட விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

13 செப்டம்பர் 2026, 12:59 am IST
பகிர்:

கோபியில் சாலையின் நடுவே போதையில் வந்த இளைஞா்கள் ஒருவருக்கொருவா் கைகளாலும், கற்களாலும் தாக்கிக் கொண்ட விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோபி நாயக்கன்காடு பகுதியில் ஈரோடு - சத்தி சாலையில் ஸ்கூட்டரில் சென்ற இளைஞா்களுக்கும் பைக்கில் சென்ற நபருக்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது .

இதில் ஆத்திரமடைந்து இரு தரப்பினரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனா். அப்போது சாலையில் கீழே கிடந்த கற்களை எடுத்தும் தாக்கிக் கொண்டனா். இதை விடியோ எடுத்தவா்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனா்.

Advertisement

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த கோபி போலீஸாா் தகராறில் ஈடுபட்ட இளைஞா்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments