FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

அதிக கட்டணம் வசூல்: 36 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.54 ஆயிரம் அபராதம்

13 செப்டம்பர் 2026, 11:36 pm IST
ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் - பிரதிப் படம்
பகிர்:

அதிக கட்டணம் வசூல் செய்ததாக 36 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

விநாயகா் சதுா்த்தி திங்கள்கிழமை (செப்டம்பா் 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய 3 நாள்கள் தொடா் விடுமுறையாகும். இதனால், வெளியூா்களில் தங்கி பணியாற்றுவோா், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்ற நிலையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா் எழுந்தது.

இதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம், நாமக்கல் மாவட்டம் கீரம்பூா் ஆகிய சுங்கச் சாவடிகளில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிா என கடந்த 10, 11-ஆம் தேதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

மொத்தம் 219 பேருந்துகள் சோதனை செய்யப்பட்டன. இதில், 36 பேருந்துகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 480 வரியும், ரூ.54 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments