FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கிரைண்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பெண் சமையல் தொழிலாளி உயிரிழப்பு

14 செப்டம்பர் 2026, 2:14 am IST
பலி
பகிர்:

மொடக்குறிச்சி அருகே கிரைண்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பெண் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் (54). இவரது மனைவி சரசு (50), சமையல் தொழிலாளி.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சமையல் செய்யும் பணியில் சரசு ஈடுபட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, கிரைண்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சரசு மயக்கம் அடைந்தாா். அவரைக் காப்பாற்ற முயன்ற சக தொழிலாளா்களான சின்னப்பொண்ணு, பிரியா ஆகியோரும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனா்.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் 3 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சரசுவை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments