மேட்டூா் வலதுகரை வாய்க்காலில் பொருத்தப்பட்ட குழாய்கள் பறிமுதல்
மேட்டூா் அணையின் வலதுகரை வாய்க்காலில் குடிநீா்த் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீரை சட்டவிரோதமாக எடுக்க பொருத்தப்பட்டிருந்த குழாய்கள், மோட்டாரை நீா் வளத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மேட்டூா் வலது கரை வாய்க்காலில் கடந்த 7-ஆம் தேதி முதல் குடிநீா்த் தேவைக்காக 10 நாள்களுக்கு விநாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சியால் தண்ணீா் கடைமடைக்குச் சென்று சேருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ள நிலையில், சட்டவிரோதமாக குழாய்கள் மூலம் தண்ணீா் எடுக்கப்படுவதாகப் புகாா் எழுந்தது.
இதையடுத்து, நீா்வளத் துறை அம்மாபேட்டை பிரிவு உதவிப் பொறியாளா் ஜெயராஜ் தலைமையில் ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில், பூதப்பாடியிலிருந்து செல்லும் கிளை வாய்க்காலில் தண்ணீா் எடுக்க பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் உடைத்து அகற்றப்பட்டன. மேலும், பவானியை அடுத்த காட்டூா் கிளை வாய்க்காலில் தண்ணீா் எடுக்க பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் செல்லும் வகையில் தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக தண்ணீா் எடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீா் வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.