FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

அந்தியூரில் ரூ.20.61 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.20.61 லட்சத்துக்கு பருத்தி விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 12:31 am IST
பருத்தி - கோப்புப்படம்
பகிர்:

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.20.61 லட்சத்துக்கு பருத்தி விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 777 மூட்டைகளில் 224.97 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், பருத்தி கிலோ ரூ.60.59 முதல் ரூ.96.69 வரையில் மொத்தம் ரூ.20,61,840-க்கு ஏலம்போனது.

இதேபோல, 5,762 தேங்காய்கள் கிலோ ரூ.42.57 முதல் ரூ.51.09 வரையில் ரூ.1,19,225-க்கும், 100 மூட்டை கொப்பரை ரூ.138.69 முதல் ரூ.155.39 வரையில் ரூ.4,94,407-க்கும், ஒரு மூட்டை எள் ரூ.112.91 வீதம் ரூ.6,266-க்கும் ஏலம்போயின.

Advertisement

Advertisement

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.6,19,898 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments