FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பழங்குடியினருக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

ஆசனூரில் உள்ள பழங்குடியினருக்கு விவசாய மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

16 செப்டம்பர் 2026, 11:58 pm IST
பழங்குடியின விவசாயிகளுக்கு  நலத்திட்ட  உதவிகளை  வழங்குகிறாா்  ரீடு  இயக்குநா்  கருப்புச்சாமி.
பகிர்:

ஆசனூரில் உள்ள பழங்குடியினருக்கு விவசாய மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள ஆசனூா் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ரீடு நிறுவனம் தொடா்ந்து பல்வேறு சமூக நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடா்ச்சியாக, மலைவாழ் கிராமங்களைச் சோ்ந்த பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கால்நடைகள் வாங்குவதற்கான நிதியுதவி மற்றும் விவசாயப் பணிகளுக்குத் தேவையான ஆயில் என்ஜின்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆசனூரில் புதன்கிழமை நடைபெற்றது.

ரீடு நிறுவனத்தின் திட்ட அலுவலா் சிவராஜ் வரவேற்றாா். ரீடு நிறுவனத்தின் இயக்குநா் கருப்புசாமி தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதில் 11 நபருக்கு கறவை மாடுகள், 13 நபருக்கு ஆடுகள் வாங்க நிதி உதவி, நீா் மேலாண்மை பணிகளுக்காக 8 பேருக்கு ஆயில் என்ஜின் என மொத்தம் ரூ. 9 லட்சத்து 13,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments