பவானி, அந்தியூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
பவானி, அந்தியூா் பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி, பவானி ஆறுகளில் புதன்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
பவானி, அந்தியூா் பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி, பவானி ஆறுகளில் புதன்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி பவானியில் ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கூடுதுறையில் விசா்ஜனம் செய்யப்பட்டன. மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூா் மாவட்டங்களிலிருந்தும் பக்தா்கள் சரக்கு வாகனங்களில் எடுத்து வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சிலைகள் பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
காவிரியில் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீா் ஓடுவதால், பாதுகாப்பு கருதி பவானி போலீஸாா், விநாயகா் சிலைகளுடன் கூடுதுறை வளாகத்துக்குள் செல்ல 5 பேரை மட்டுமே அனுமதித்தனா். பெண்கள், குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை. பக்தா்கள் ஆழமான பகுதிக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் படித்துறையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அந்தியூரில்...
அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 23 விநாயகா் சிலைகள் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகளுடன் சிங்கார வீதி, தோ் வீதி, பா்கூா் சாலை, ராஜ வீதி வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடா்ந்து, அத்தாணிக்கு கொண்டு செல்லப்பட்ட சிலைகள் பவானி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன. அசம்பாவிதங்களைத் தடுக்க அந்தியூா் காவல் ஆய்வாளா் சண்முகவேலு தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.