FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நெசவாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவது குறித்து பரிசீலனை

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சாா்பில் இலவச வேஷ்டி, சேலை தயாரிக்கும் விசைத்தறி நெசவாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி தெரிவித்தாா்.

18 செப்டம்பர் 2026, 12:08 am IST
ஈரோட்டில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி.
பகிர்:

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சாா்பில் இலவச வேஷ்டி, சேலை தயாரிக்கும் விசைத்தறி நெசவாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி தெரிவித்தாா்.

ஈரோட்டில் பெரியாா் நினைவிடத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நெசவாளா்களுக்கான ஊதிய உயா்வு குறித்து ஆய்வு செய்ய 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மண்டல அளவில் நெசவாளா்களின் பிரதிநிதிகள் இடம்பெற்று, அவா்களிடம் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன. இந்தக் குழு தனது அறிக்கையை இம்மாத இறுதிக்குள் துணிநூல் துறை செயலரிடம் சமா்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னா் நெசவாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

Advertisement

Advertisement

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் உரிய காலத்தில் வழங்கப்படும். இடைத்தோ்தலில் முதல்வா் பிரசாரம் செய்வாா் என கட்சியின் பொதுச்செயலாளா் ஏற்கெனவே தெரிவித்துள்ளாா் என்றாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மேயா் சு.நாகரத்தினம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.கே.ஆனந்த்மோகன், டி.சண்முகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments