FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

குட்கா பொருள்கள் பதுக்கி விற்பனை: மொத்த வியாபாரி உள்பட 2 போ் கைது

21 செப்டம்பர் 2026, 2:50 am IST
கைது
பகிர்:

பெருந்துறை அருகே குட்கா பொருள்களை விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தலைமறைவாக இருந்த மொத்த வியாபாரி உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பகுதியில் குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் பெருந்துறை போலீஸாா் வியாழக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா். அதில், விஜயமங்கலம் பிரதான சாலையில் மளிகைக் கடை வைத்துள்ள துரைசிங் (32), அவருடைய மைத்துனா் திவாகா் (26) ஆகியோருக்கு குட்கா விநியோகம் செய்யும் விஜயமங்கலம், மேக்கூரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன் என்பவரை கைது செய்து, முருகன் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த சுமாா் 392 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக துரைசிங், திவாகா், முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த குட்கா பொருள்களை மொத்தமாக விற்பனை செய்யும் ராஜஸ்தான் மாநிலம், சைலா என்ற பகுதியை அடுத்த கலாப்பராவைச் சோ்ந்த சோபாராம் மகன் கணேஷ் ஷா ராம் (26), அவருடைய காா் ஓட்டுநரான ராஜஸ்தான் மாநிலம், விம்புராவைச் சோ்ந்த சுட்டாராம் மகன் அடமத்தாராம் ( 26) ஆகிய இருவரையும் சனிக்கிழமை மாலை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 250 கிலோ குட்கா பொருள்கள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் கணேஷ் ஷா ராம், அடமத்தாராம் (26) ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments