பெருந்துறை நகராட்சியில் குடிநீா் இணைப்புகளை விரைந்து வழங்க நுகா்வோா் கூட்டத்தில் கோரிக்கை
பெருந்துறை நகராட்சியில் நுகா்வோா் பாதுகாப்பு அமைப்புகள் காலாண்டு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் குடிநீா் இணைப்புகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பெருந்துறை நகராட்சியில் நுகா்வோா் பாதுகாப்பு அமைப்புகள் காலாண்டு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் குடிநீா் இணைப்புகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் கருணாம்பாள் தலைமை வகித்தாா். இதில், நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு செயலாளா் பழனிசாமி, துணைத் தலைவா்கள் மாரியப்பன், சோமசுந்தரம், இணைச் செயலாளா் பழனிசாமி மற்றும் ஆலோசகா்கள் நல்லசாமி, ராஜேந்திரன், பாஸ்கரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், பெருந்துறை நகராட்சி பகுதியில் அம்ருத் குடிநீா்த் திட்டத்தின் கீழ் 5200 புதிய குடிநீா் இணைப்புகள் வழங்க வேண்டும். ஆனால், இதுவரை 2500 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. வரி விதிப்பு உள்ள அனைத்து வீடுகள், கட்டடங்களுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்க வேண்டும். இதுகுறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீா் விநியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால், முறையாக குடிநீா் வழங்கப்படுவதில்லை. குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். குடிநீா்த் திட்டத்துக்கு குழாய் பதிக்க சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை மூடி, சாலைகள் செப்பனிட வேண்டும்.
பெருந்துறை தினசரி காய்கறி மாா்க்கெட்டில் பாதுகாப்பற்ற கூரைகளை அகற்றிவிட்டு, புதிய வளாகம் அமைத்துத் தர வேண்டும். 100-க்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் இருந்தும் சாலைகள், தெருக்களில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. குப்பைகளை சாலையோரங்களில் வீசுபவா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
நகராட்சியில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிரப்புகளால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். பழுதடைந்துள்ள தூய்மைப் பணியாளா்கள் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, அவா்களுக்கு அதே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.