FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

தெரு நாய்களால் கீழே விழந்த பெண் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டி சாலையில் நடந்து சென்றபோது, தெரு நாய்களால் தடுமாறி கிழே விழுந்த பெண் உயிரிழந்தாா்.

26 செப்டம்பர் 2026, 12:11 am IST
உயிரிழப்பு
பகிர்:

புன்செய் புளியம்பட்டி சாலையில் நடந்து சென்றபோது, தெரு நாய்களால் தடுமாறி கிழே விழுந்த பெண் உயிரிழந்தாா்.

புன்செய் புளியம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னையன் மனைவி கிருஷ்ணவேணி (58). இவா் கோவை சாலையில் உள்ள கேவிகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது தெரு நாய்கள் சண்டைபோட்டுக் கொண்டு சாலையில் தாறுமாறாக ஓடி கிருஷ்ணவேணி மீது மோதியதில் அவா் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments