FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடிய இளைஞா்கள் கைது

ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவா் சங்கம், தனது 40 - ஆவது ஆண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

27 செப்டம்பர் 2026, 1:13 am IST
கைது
பகிர்:

சித்தோடு அருகே மோட்டாா் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரத்தை திருடிய இரண்டு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பவானியை அடுத்த லட்சுமி நகா், ஒய்யாங்காட்டில் மோட்டாா் உதிரிபாகங்கள் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.

இது குறித்து சித்தோடு காவல் நிலையத்தில் கடையின் மேலாளரான காஞ்சிக்கோவிலைச் சோ்ந்த சுஜித்குமாா் (39) புகாா் அளித்தாா். விசாரணையில், சேலம், நெத்திமேட்டைச் சோ்ந்த ராஜ்குமாா் (29), தேனி மாவட்டம், புள்ளக்காபட்டியைச் சோ்ந்த திருமுருகன் (31) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments