தாளவாடியில் பாறை மீது படுத்திருந்த சிறுத்தை: மக்கள் அச்சம்
தாளவாடி மலைப் பகுதியில் பாறை மீது படுத்திருந்த சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்தனா்.
தாளவாடி மலைப் பகுதியில் பாறை மீது படுத்திருந்த சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள், குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வனத்தில் இருந்து சனிக்கிழமை பகல் வெளியேறிய சிறுத்தை, தாளவாடி மலைப் பகுதியில் மல்லன்குழி கிராமம் அருகே விளைநிலத்தில் இருந்த பாறை மீது படுத்திருந்தது.
Advertisement
Advertisement
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து, ஜீரகள்ளி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.