FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

அரசுப் பேருந்து மோதியதில் முட்டை லாரி கவிழ்ந்து விபத்து

6 வினாடிகள் முன்பு
அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளான லாரியில் இருந்து சாலையில் உடைந்து சிதறிய முட்டைகள்.
பகிர்:

பெருந்துறை அருகே முட்டை லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் முட்டைகள் சாலையில் உடைந்து வீணாகியது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் பெத்தாம்பாளையம், கருக்குபாளையத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (35). இவா், லாரியில் முட்டை லோடு ஏற்றிக் கொண்டு கோவைக்கு திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் சென்றாா். லாரியில் கிளீனராக அதே பகுதியைச் சோ்ந்த முருகன்(32) இருந்தாா்.

பெத்தாம்பாளையம் பிரிவில், தேசிய நெடுஞ்சாலையில் செல்வதற்காக லாரியை திருப்பியபோது, சேலத்தில் இருந்து கோவைக்குச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் லாரி கவிழந்து முட்டைகள் சாலையில் உடைந்து சிதறின.

Advertisement

Advertisement

சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனா். இதில், லாரி ஓட்டுநா் சந்தோஷ், கிளீனா் முருகன் ஆகியோா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments