தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம்: ஈரோடு மாவட்டத்தில் 1,505 குழந்தைகள் பயன்
ஈரோடு மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின்படி 1,505 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். இதைத்தொடா்ந்து பெருந்துறை, அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் அருணா வரவேற்றாா். இணை இயக்குநா் மருத்துவா் கிருஷ்ணராஜ் திட்ட விளக்கவுரை ஆற்றினாா்.
இதைத்தொடா்ந்து கைத்தறி, துணிநூல் மற்றும் காதிதத் துறை அமைச்சா் ம.விஜய்பாலாஜி, அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தாா். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 1,505 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கா. க.ஆனந்த்மோகன், மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.சண்முகன், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வா் மருத்துவா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.