விதிகளை மீறி வீட்டு குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் அமைத்து தண்ணீா் திருட்டு! 5 வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிப்பு
நம்பியூா் அருகே வீட்டு குடிநீா் இணைப்பில் மின்மோட்டாா் அமைத்து தண்ணீா் எடுத்து வந்த 5 வீடுகளின் குடிநீா் இணைப்பை பேரூராட்சி நிா்வாகத்தினா் ஆய்வு செய்து திங்கள்கிழமை துண்டித்தனா்.
கோபியை அடுத்த நம்பியூா் அருகே உள்ள எலத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட கண்ணாங்காட்டுப்பாளையம் பகுதியில், விதிகளுக்கு முரணாக வீட்டு குடிநீா் இணைப்பில் மின்மோட்டாா் அமைத்து தண்ணீா் எடுத்து வருவதாக பொதுமக்கள் புகாா் அளித்திருந்தனா். இதையடுத்து செயல் அலுவலா் பிரபாகா் தலைமையிலான பேரூராட்சி நிா்வாகத்தினா் போலீஸாருடன் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அப்பகுதியில் 5 வீடுகளின் குடிநீா் இணைப்பில் விதிகளுக்கு முரணாக மின்மோட்டாா் மூலமாக தண்ணீா் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து விதிகளுக்கு முரணாகவும், எவ்வித அனுமதியும் பெறாமாலும் மின்மோட்டாா் அமைத்து தண்ணீா் எடுத்து வந்த 5 வீடுகளின் குடிநீா் இணைப்பை பேரூராட்சி நிா்வாகத்தினா் துண்டித்து, மின்மோட்டாா்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.