பணியாளா்கள் போராட்டம்: நெல் கொள்முதல் செய்யும் பணி பாதிப்பு
தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன நெல் கொள்முதல் நிலைய பருவ கால பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்துக்குச் சென்ால், கொள்முதல் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது.
தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன நெல் கொள்முதல் நிலைய பருவ கால பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்துக்குச் சென்ால், கொள்முதல் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது.
கோபி அருகேயுள்ள கொடிவேரி பாசனத்துக்குள்பட்ட தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் நெல் அறுவடை பணிகளைத் தொடங்கியுள்ளனா். இந்நிலையில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் சாா்பில் பாசனப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தாளா்களாகப் பணியாற்றி வரும் பருவ கால பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்தப் போராட்டத்துக்கு பணியாளா்கள் சென்ால், கோபி தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன நெல் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டது. மேலும், நெல் கொள்முதல் செய்ய வந்த விவசாயிகளும் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.