கேரளத்துக்கு நீலகிரி மாவட்ட மக்கள் ரூ. 38 லட்சம் நிவாரண நிதி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் சார்பில் ரூ.38 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் சார்பில் ரூ.38 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம், பல்வேறு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், தனி நபர்களால் மனிதநேயத்துடன் நிவாரணப் பொருள்கள், நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.19,14,635 மதிப்பிலும், கோத்தகிரி அரிமா சங்கம் சார்பில் ரூ. 70,000, ஜிம்கானா கிளப் சார்பில் ரூ. 5 லட்சம், நீலகிரி மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ரூ.66,000 பேரூராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் ரூ. 1.1 லட்சம், கோத்தகிரி பொதுமக்கள் சார்பில் ரூ.1 லட்சத்து 81,855, பாலகொலா ஓய்வுபெற்றோர் நலச் சங்கம் சார்பில் ரூ.10,000, டாக்டர் என்.ஜி.ராஜூ ரூ.25,000, ரவி ரூ.10,000, பைகமந்துவைச் சேர்ந்த கேசவமூர்த்தி ரூ.4,000ம், தொதநாடு சீமை படுகர் நலச் சங்கம் சார்பில் ரூ.25,000, பாலகொலா ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.25,000, தமிழ்நாடு மருத்துவ சவரத் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் ரூ.5,000, ஒருமா ஊட்டி குடியிருப்போர் மலையாள சங்கம் சார்பில் ரூ. 4.2 லட்சம், ஒட்டிமர ஒசஹட்டி ஊர் பொதுமக்கள் ரூ.10,700, டாக்டர் கேசவன் சிவசக்தி மருத்துவமனை சார்பில் ரூ.20,000, மேலூர் ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.32,050, கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி சார்பில் ரூ. 3.5 லட்சம், கோத்தகிரி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ரூ.25,000 என மொத்தம் ரூ.37 லட்சத்து 59,240 கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலையாக மாவட்ட ஆட்சியர் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 1,865 கிலோ தேயிலைத்தூள் கேரளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.