மூன்று மாநில வன எல்லையில் அதிரடிப்படை ஏடிஜிபி ஆய்வு
கூடலூர் அருகே கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையையொட்டி உள்ள தமிழக வனப் பகுதியில்
கூடலூர் அருகே கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையையொட்டி உள்ள தமிழக வனப் பகுதியில் அதிரடிப்படை ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், முதுமலை வனப் பகுதி கேரளம், கர்நாடக வனப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது. வன எல்லைப் பகுதிகளில் உள்ள பழங்குடி கிராமங்களுக்குச் சென்று மாவோயிஸ்டுகள் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனால், தமிழக வன எல்லைப் பகுதியில் தமிழக அதிரடிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் முதுமலை புலிகள் காப்பத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தின் முத்தங்கா சரணாலயம், கர்நாடகத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் எல்லையிலும், மூன்று மாநில வனப்பகுதிகள் சந்திக்கும் இடத்திலும் ஏ.டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டார்.
நக்ஸல் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. மோகன் ராவ், சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.எஸ்.பி. சக்திவேல், மசினகுடி ஆய்வாளர் முரளிதரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர், உள்ளூர் போலீஸார், வனத் துறையினர் வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.