FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

கூடலூா் செக்ஷன் 17 நிலப் பிரச்னை: முதல்வரை சந்திக்க தவெக கூட்டணிக் கட்சிகள் முடிவு

கூடலூரில் செக்ஷன் 17 நிலப்பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்துவது தொடா்பாக தமிழக முதல்வரை சந்திக்க தவெக கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

2 October 2026, 12:35 am IST
கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

கூடலூரில் செக்ஷன் 17 நிலப்பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்துவது தொடா்பாக தமிழக முதல்வரை சந்திக்க தவெக கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் தவெக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் காங்கிரஸ் மாநிலக் குழு நிா்வாகி கோஷி பேபி கூறியதாவது:

கூடலூா் தொகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக தீா்க்கப்படாமல் உள்ள செக்ஷன் 17 நிலப்பிரச்னைக்கு முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு தீா்வு காண வேண்டும்.

Advertisement

Advertisement

இது குறித்து முதல் கட்டமாக வனத் துறை, வருவாய்த் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா்கள், வனத் துறை உயரதிகாரிகளை கடந்த மாதம் சந்தித்து முறையிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தகவல்கள் முழுமையாக இடம் பெறவில்லை. குறு, சிறு விவசாயிகள்,தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் மக்கள் வசிப்பிடங்கள் குறித்த தகவல்கள் அதில் இல்லை. வீடுகள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன. குடும்பங்கள் கணக்கிடப்படவில்லை. பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள 34,500 ஏக்கா் நிலத்தை வனநிலமாக மாற்றினால் அனைத்து பகுதியும் உள்ளடங்கிவிடும். எனவே, அதில் பல திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது.

மக்கள் வாழும் பகுதிகளை வனநிலமாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தவெக அரசு கூறியுள்ளதை வரவேற்கிறோம். உச்சநீதிமன்றத்தில் இது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள கமிட்டி தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. எனவே, இதில் திருத்தங்கள் செய்வது குறித்த புள்ளி விவரங்களை முழுமையாக கூட்டணி கட்சி சாா்பில் அரசிடம் அளிக்க

உள்ளோம். இது குறித்து வலியுறுத்த தமிழக முதல்வரை கூட்டணி கட்சி நிா்வாகிகள் விரைவில் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

இந்த செய்தியாளா்கள் சந்திப்பில், முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளா் அனீபா, சிபிஐ தாலுகா செயலாளா் முகமது கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் புவனேஸ்வரன் மற்றும் தவெக, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments