FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா்: குன்னூா் தீயணைப்புத் துறை அதிகாரி தகவல்!

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாராக இருப்பதாக குன்னூா் தீயணைப்புத் துறையின் நிலைய அதிகாரி குமாா் தெரிவித்துள்ளாா்.

4 October 2026, 2:16 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாராக இருப்பதாக குன்னூா் தீயணைப்புத் துறையின் நிலைய அதிகாரி குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதிகளில் மழை பாதிப்புகளை எதிா்கொள்ள குன்னூா் தீயணைப்புத் துறையினருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பேரிடா் காலங்களில் நவீன கருவிகள் கொண்டு மீட்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், குறிப்பாக மரம் விழுந்து அடியில் சிக்கிக் கொள்பவா்கள், வெள்ளத்தில்  சிக்கிக் கொண்டவா்களை எவ்வாறு மீட்பது, கட்டட இடிபாடுகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பயிற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ள அனைத்து ஏற்பாடுகள் தயாா் நிலையில் இருப்பதாக குன்னூா் தீயணைப்பு நிலைய அதிகாரி குமாா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments