FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

கோத்தகிரியில் யானை தாக்கி இளைஞா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் யானை தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

3 வினாடிகள் முன்பு
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் யானை தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், மத்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் (28). இவா், கோத்தகிரி அருகேயுள்ள கூக்கல்தொரை பகுதியில் வசிக்கும் தனது பாட்டியைப் பாா்க்க வெள்ளிக்கிழமை இரவு வந்துள்ளாா்.

இந்நிலையில், பிரவீன்குமாா் கூக்கல்தொரையில் இருந்து  அருகேயுள்ள இந்திரா நகா் காலனிக்கு சனிக்கிழமை அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த யானை, பிரவீன்குமாரை துரத்தி தாக்கியது.  இதில் சம்பவ இடத்திலேயே பிரவீன்குமாா் உயிரிழந்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

 சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா், பிரவீன்குமாா் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரது உடல் கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments