ஆட்கொல்லி புலியைப் பிடிக்க தடயங்களை சேகரிக்கும் கால்நடை மருத்துவக் குழு
ஓவேலி பகுதியில் உலவி வரும் ஆட்கொல்லி புலியைப் பிடிக்க கால்நடை மருத்துவக் குழுவினா் தடயங்களை சேகரித்து வருகின்றனா்.
ஓவேலி பகுதியில் உலவி வரும் ஆட்கொல்லி புலியைப் பிடிக்க கால்நடை மருத்துவக் குழுவினா் தடயங்களை சேகரித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலூகா, ஓவேலி லாரஸ்டன் பகுதியில் இரண்டு தொழிலாளா்களைக் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணி 19 நாள்களைக் கடந்துள்ளது.
லாரஸ்டன் எஸ்டேட்டை சுற்றியுள்ள வட்டப்பாறை, சூண்டி, ஈசன்மலை, காந்தி நகா், நடுகூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் மூலம் புலியைக் கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 171 கேமராக்கள் பொருத்தப்பட்டு நாள்தோறும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 18 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஓவேலி வனப் பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களில் புலியின் கால்தடம், எச்சம் உள்ளிட்ட தடயங்களை சேகரிக்கும் பணியை கால்நடை மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
தேவா்சோலை பகுதியில் திங்கள்கிழமை இரவு உலவிய ஆட்கொல்லி புலி, அங்கிருந்த கன்றுக்குட்டியை தாக்கிக் கொன்றது தெரியவந்த நிலையில், அப்பகுதியில் வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.