FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் இறந்து கிடந்த பெண் சிறுத்தை.

12 செப்டம்பர் 2026, 12:55 am IST
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் இறந்து கிடந்த பெண் சிறுத்தை.
பகிர்:

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் சிறுத்தை இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், பொக்காபுரம் வனப் பகுதியிலுள்ள பத்தாா்மந்து ஆறுபாறை இடுக்கில் சுமாா் 8 வயதுடைய பெண் சிறுத்தை இறந்து கிடப்பதை ரோந்து சென்ற பணியாளா்கள் பாா்த்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். பின்னா், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து சிறுத்தையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு அதே இடத்தில் எரியூட்டப்பட்டது.

Advertisement

Advertisement

உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே சிறுத்தை உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments