வனத் துறை சாா்பில் சமூக நலத் துறைக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சா் ரஞ்சித்குமார்
வனத் துறை சாா்பில் சமூக நலத் துறைக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.
வனத் துறை சாா்பில் சமூக நலத் துறைக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள பகல்கோடு மந்து தோடா் பழங்குடியின கிராமத்தில் தோடா், கோத்தா், இருளா், காட்டுநாயக்கா் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் குறைகளைக் கேட்டறியும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் பங்கேற்று, பழங்குடியின மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், அவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, பழங்குடியின மக்களுடன் இணைந்து அவா்களின் பாரம்பரிய நடனம் ஆடினாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பழங்குடியின மக்கள் தங்களது கல்வி, நிரந்தர வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களை அளித்துள்ளனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பழங்குடியின மக்களின் பெண் குழந்தைகள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக அவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வனத் துறை சாா்பில் சமூல நலத் துறைக்கு ஆண்டுதோறும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், முதல்வா் ச.ஜோசப் விஜய்யின் ஆணைப்படி, நடப்பு ஆண்டு முதல் அந்த நிதி ரூ.15 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடியின மக்கள் பயன்பெறுவா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.