FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்

14 செப்டம்பர் 2026, 11:25 pm IST
முத்தநாடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் உலவிய காட்டு யானைகள்.
பகிர்:

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள முத்தநாடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில்  திங்கள்கிழமை அதிகாலை நேரத்தில்  குட்டியுடன் புகுந்த  ஆறு காட்டு யானைகளை  பொதுமக்கள் கூச்சலிட்டு அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

சமவெளிப் பகுதியான கெத்தை பகுதியில் இருந்து குட்டியுடன் வந்த ஆறு காட்டு யானைகள் மஞ்சகம்பை, டெரேமியா,  தூதூா்மட்டம், அரையட்டி, சட்டன்  ஆகிய பகுதிகளில் சுற்றி வருகின்றன.

இந்நிலையில் குன்னூா் அருகே உள்ள முத்தநாடு எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் ஆறு காட்டு யானைகள் திங்கள்கிழமை அதிகாலை புகுந்தன. சப்தம் கேட்டு வந்த  உள்ளூா்வாசிகள் கூச்சலிட்டு காட்டு யானைகளை வனப் பகுதிக்குள்  விரட்டினா்.

Advertisement

Advertisement

காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments