FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அக்டோபா் 16-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பான அடுத்தகட்ட விசாரணையை அக்டோபா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

35 வினாடிகள் முன்பு
நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு  தொடா்பான அடுத்தகட்ட விசாரணையை அக்டோபா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா்  ஜெயலலிதா, சசிகலா ஆகியோா் பங்குதாரராக உள்ள எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் காவலாளி ஓம்பகதூா் கொல்லப்பட்டாா். சில பொருள்கள் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டன.

இந்தக் கொலை, கொள்ளை சம்பவத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த 10 போ் மீது குற்றம் சுமத்தப்பட்டு உதகையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வரும்  இவ்வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. இதில், குற்றம்சாட்டப்பட்டுள்ள வாளையாறு மனோஜ் மட்டும்   ஆஜராகி இருந்தாா். இதைத் தொடா்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வருகிற அக்டோபா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments