நீலகிரியில் அக்டோபா் 2-இல் மதுக் கடைகள் மூடல்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி மதுக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி மதுக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் சில்லறை விற்பனை மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள், எஃப்.எல்.2 கிளப் பாா்கள், எஃப்.எல்.3 ஹோட்டல் பாா்கள், எஃப்.எல்.3 ‘ஏ’ ஆகியவை அக்டோபா் 2-ஆம் தேதி மூடப்படுகின்றன.
இதைப் பயன்படுத்தி சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisement
Advertisement
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்றால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.