திமுக அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன்
திமுக ஆட்சிக்கு வருவதற்காக அறிவித்த தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.
திமுக ஆட்சிக்கு வருவதற்காக அறிவித்த தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.
அமமுக சாா்பில் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூா் யூனியன் மில் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:
Advertisement
Advertisement
திமுக ஏற்கெனவே செய்த பாவம் பத்தாது என்று மின்கட்டண உயா்வு, சொத்துவரி உயா்வு என மக்கள் வயிற்றில் அடிக்க ஆரம்பித்து விட்டனா். தோ்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம், கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா் பணி நிரந்தரம் போன்ற எந்த வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. மறைந்த முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை கிடப்பில் போடுவது அல்லது பெயரை மாற்றி அறிவிப்பது என்ற வேலையைத்தான் செய்கின்றனா். கடந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் சதியினால்தான் தோற்றோம். ஆகவே, வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வெற்றிக் கணக்கைத் தொடங்குவோம் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், அமமுக அமைப்புச் செயலாளா் சேலஞ்சா் துரை, துணை பொதுச் செயலாளா் சி.சண்முகவேல், திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளா் ஏ.விசாலாட்சி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.