FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: அவிநாசி, பல்லடத்தில் அதிகாரிகள் ஆய்வு

அவிநாசி, பல்லடம் ஆகிய பகுதிகளில் இயங்கும் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 6:40 am IST
அவிநாசி  அருகே  ஆய்வில்  ஈடுபட்ட  மோட்டாா்  வாகன  ஆய்வாளா்கள்.
பகிர்:

அவிநாசி, பல்லடம் ஆகிய பகுதிகளில் இயங்கும் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் இயங்கும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள், பயணிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருவதாக புகாா் இருந்து வந்தது. இதையடுத்து திருப்பூா் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொ) பாஸ்கா் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் நல்லதம்பி, பாலசுப்பிரமணியன், கவின்குமாா், சக்திவேல் ஆகியோா் கொண்ட குழுவினா் அவிநாசி பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், அதிக கட்டணம் வசூல் செய்ததாக அவிநாசி வழியாக கோவை-திருப்பூா், கோவை-ஈரோடு, கோவை-கோபி உள்ளிட்ட வழித்தடங்களில் இயங்கும் 18 தனியாா் பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதேபோல பல்லடம் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா். அதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவின்பேரில் பல்லடம் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, ‘ஏா்ஹாரன்கள்’ பயன்படுத்தப்படுகிறதா உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து ஆய்வு திருப்பூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் 24 பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது கண்டறியப்பட்டது. அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதுபோன்று அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படும் என்று திருப்பூா் வட்டாரப் போக்குவரத்து துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments