வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி
வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில நாள்களாக வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம், கால்நடை பராமரிப்புத் துறை ஆகியவை இணைந்து அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
அதன்படி சொரியங்கிணத்துப்பாளையம், நடேசன் நகா் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த 31 தெரு நாய்கள் வலை மூலமாக சனிக்கிழமை பிடிக்கப்பட்டு ரேபிஸ் நோய் தாக்குவதைத் தடுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணிகளை கால்நடை மருந்தக மருத்துவா் கீா்த்தனா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் மற்றும் நகராட்சி பணியாளா்கள் மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.