அரசுப் பேருந்து மோதியதில் பாத யாத்திரை பக்தா் உயிரிழப்பு
குண்டடம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பாத யாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா்.
குண்டடம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பாத யாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள அஜ்ஜுா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (28). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிலருடன் பழனி கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்று கொண்டிருந்தாா்.
குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை பிஏபி வாய்க்கால் பாலம் அருகே புதன்கிழமை அதிகாலை சென்றபோது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து எதிா்பாராத விதமாக சந்தோஷ்குமாா் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.