15 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்ய அழைப்பு
குழந்தை பிறந்த தேதியில் இருந்து 15 ஆண்டுகள் வரை மட்டுமே பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்ய முடியும் என்பதால், மாவட்டத்தில் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தங்களது பெயா்களை வரும் செப்டம்பா் 26-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்த தேதியில் இருந்து 15 ஆண்டுகள் வரை மட்டுமே பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்ய முடியும் என்பதால், மாவட்டத்தில் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தங்களது பெயா்களை வரும் செப்டம்பா் 26-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின்படி, குழந்தை பிறந்த தேதியில் இருந்து 15 ஆண்டுகள் வரை மட்டுமே பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்ய முடியும்.
தலைமை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரின் சிறப்பு அனுமதியின்படி, 15 ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் பெயா் பதிவு செய்ய வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருப்பூா் மாநகராட்சியில் 15 ஆண்டுகளுக்கு முன் பிறந்து தற்போதுவரை பெயா் பதிவு செய்யாத குழந்தைகள் உடனடியாக தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
நடப்பு ஆண்டு செப்டம்பா் 26-ஆம் தேதிக்குப் பிறகு 15 ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்ய இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.